Monday, January 15, 2018

“தமிழர் திருநாளா", "மகர சங்கராந்தி" எனும் பாரத கலாச்சாரமா?


  
   எனக்கு சிறுவயதில் பொங்கல் திருநாள் வந்தால், நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை கிடைக்கும். அப்போது காப்புக்கட்டுக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து சாணமிட்டு மெழுகி, பாத்திர பண்டங்களை கழுவி வைத்து, சுண்ணம் இட்டு வீட்டை வெள்ளையடித்து சுத்தப்படுத்துவர். அன்று காலை காப்புக்கட்டு என்று கூறி வேப்பிலை, சிறுபீளை, ஆவாரை போன்ற மூன்று செடிகளின் நுணியை ஒடித்து வீட்டை சுற்றிலும் காப்பு கட்டுவர். இதனை ஏன் என்று கேட்டால் மறுநாள் “சங்கராந்தி” வருவதால் கட்டுகிறோம். சங்கராந்தி என்பது ஒரு காலதேவதை. வானில் நிகழும் நிகழ்வாக காட்டப்படுகிறது. அது மறுநாள் தை 1 ஆம் தேதி வானில் வரும்போது கப்புக்கட்டாத வீடுகளில் அந்த பீடை புகுந்து விடுவதாக ஐதீகம்.

  
   தை 1 ஆம் தேதி சங்கராந்தி பீடை நகரும்போது புதுப்பானையில் புதுப்பொங்கலிட்டு சூரியனுக்கு படைப்பர். மறுநாள் மாட்டுப்பொங்கலன்று மாட்டுக்கு சகலவிதமான பணிவிடைகளையும் செய்து பட்டிபொங்கலென்று மாட்டுபட்டிகளில் பொங்கல் வைப்பர். அதற்கு மறுநாள் காணும் பொங்கல் அன்று அங்கங்கே சேவல்சண்டை, குதிரை வண்டி பந்தயம், பட்டியில் இருந்து வரும் மாடுகளை பிடித்து மூக்கணம் இடுவது போன்ற சம்பவங்கள் நடக்கும். இவை வீரத்தின் வெளிப்பாடாக விளையாட்டாக ஆங்காங்கே விமரிசையாக கொண்டாடப்படும்.

     இப்படி காப்புக்கட்டு, பட்டிப்பொங்கல், சேவல் சண்டை, மஞ்சு விரட்டு என பழகிப்போன எனக்கு சிறுவயதில் காலண்டரை அல்லது பள்ளிக்கூட டைரிகளை பார்க்கும் போது, போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று குறிப்பிடப்பட்டு விடுமுறை என்றிருக்கும். இது ஏன் இவ்வாறு மாற்றி குறிப்பிடப்பட்டிருகிறது என்ற சந்தேகம் எழும் ஆனால் கேட்டதில்லை. வயது ஆக ஆக பல மாநிலங்கள், மாவட்டங்கள், செய்திகள் போன்றவற்றை படிக்கும் போது சிறிது உண்மை விளங்கியது மேலும், விரிந்த சிந்தனையுடன் பலவற்றை ஆய்ந்த போது பொங்கல் என்பது சங்கராந்தி எனும் வானியல் நிகழ்விற்கு செய்யப்படும் சடங்கு என்பது புரிந்தது. அவற்றை அறுவடை திருநாள், பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்று கூறி சிலர் தமிழகத்திற்கு மட்டுமே உண்டானது என்பதை சித்தரித்து திரித்து விட்டதும், மேலும் ஒரு படி போய் தமிழ் புத்தாண்டு (தை 1 ) என்ற அரசு அறிக்கை செய்த கூத்துக்களும் இங்கே நடந்தன. தமிழகத்தை பாரத கலாச்சாரத்திலிருந்து பிரித்து விட பல சதிகள் நடைபெறுவதாக உணர்ந்தேன். கடந்த பொங்கலில் தமிழனின் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டை தடைசெய்ய சில வேற்றுமத கும்பல் கோர்ட்டில் வழக்கு தொடுக்கும் போது இந்த தமிழர் திருநாள் கலாச்சாரத்தை ஏன்பரப்பினர் என்று விளங்கியது. கோர்ட்டில், தமிழகம் இல்லது மகாராஷ்டிரா,கர்நாடக மாநிலங்கள் ஜல்லிக்கட்டு போன்று அங்கே சங்கராந்தி சமயத்தில் கொண்டாடப்படும் விளையாட்டுக்களை இந்த வேற்றுமத அமைப்புகள் விலங்கு நல அமைப்பு என்ற பெயரில் தடை செய்ததை  பார்த்த போது பிற மாநிலங்களிலும் சங்கராந்தி, ஜல்லிகட்டுக்கு நிகரான விளையாட்டுக்களை இருப்பதை உணரமுடிந்தது. அதன் பின் பிறமாநில சங்கராந்தி  கொண்டாட்டங்களை தமிழக பொங்கல் பண்டிகையோடு ஒப்பிட்டு பார்த்த போது மொழிரீதியாக வேறுவேறு பெயர்களில் இவை கொண்டாடப்பட்டாலும், வானியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஒன்றாகவே இருப்பதை உணர முடிந்தது. அப்போதுதான், இங்கு இத்தனை நாள் தமிழர் திருநாள் என்று கூறி சங்கராந்தியை மறைத்ததும், அதனை ஒட்டி திருவள்ளுவராண்டு என்ற புதிய காலண்டரை உருவாக்க முயன்றதும், தைப்புத்தாண்டு என்ற கூற்றுடன் நம் காதில் பூ சுத்த முயன்ற நிகழ்வுகளும், தனித்தமிழ் நாடு கோரும் நாத்திக, பாசிஸ, ஈழ-கிறிஸ்துவ, கம்முனிச பயங்கரவாத சக்திகளின் சதிகளும் புரிய ஆரம்பித்தன. இன்று “நாம் தமிழர்” என்று கூறி சில கிரிப்டோ கிறிஸ்துவர்கள் தமிழ் என்ற பெயரில் சில நாட்டு நடப்புகளை கொண்டு மக்கள் உணர்வை (குறிப்பாக இளைஞர்களை) தூண்டும் வகையில் வக்கணையாக பேசி பாரத கலாச்சாரத்திற்கு எதிராக அரசியல் பிழைப்பு நடத்துவதை பார்க்கும்போது நம்மை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர முடிந்தது.

  
   ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் வட-தென் மாகாணங்களுக்கு இடையே மதவெறியை தூண்டி அவர்களது உள்நாட்டு காலாச்சாரத்தை கெடுத்தது போல பாரதத்தில் வட-தென்னிந்திய பிரிவினையை உண்டாக்க ஆரிய-திராவிட பொய்யுரை சில அந்நிய சக்திகளால் கடந்த 127  வருஷங்களாக பரப்பப்பட்டு, படிக்கவைக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் தமிழர் தமிழர் என்று கூவும் சக்திகளிடம் எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

     இனி சங்கராந்தியின் பாரத பன்மையை பார்ப்போம்.


மகரசங்கராந்தி – தமிழில் அர்த்தம்:
     மகரம் என்பது தமிழ் மாதங்களில் 10 வது மாதமான தை மாதம். சூரிய-சந்திரமான கணிதப்படி (தமிழக பஞ்சாங்கம்) தனுர் மதத்திலிருந்து சூரியன் மகர மாதத்திற்கு சஞ்சரிக்கும் நாள் தை 1. அதே தை 1 ஆம் தேதியில் சங்கராந்தி எனும் காலதேவதை மகரதிலிருந்து தனுர் ராசியில் பிரவேசிக்கிறது. அதுமுதல் சூரியுதயம் தெற்குதிசையிலிருந்து வடக்குதிசை நோக்கி மாறி பயணிக்கும் ஆனி இறுதி வரை இந்த உதயம் வடக்கு நோக்கி நகர்ந்து வடகிழக்கு திசை வந்து சேரும். இதற்கு உத்தராயண புண்யகாலம் என்று பெயர். அதாவது வாடா திசை (உத்தரம்) நோக்கி நகர்தல். இதே அர்த்தமே பாரதம் முழுவதும் உள்ளது. இந்த சங்கராந்தி வரும் முன்பு மார்கழி கடைசி நாள் காப்பு கட்டப்படுகிறது. வடமாநிலங்களில் போகி, லோஹ்ரி என்று பலபெயர்களில் கொண்டாடப்படுகிறது.  அடுத்த நாள் சங்கராந்தியில் பல நதிகளில் புனித நீராடுவர். சங்கராந்தியில் சூரியனுக்கு பொங்கலிட்டு அதன் பின் பணிகளை தொடருவர். விவசாய பணிகள் பெரும்பாலும் அடுத்த மூன்ற மாதம் (சித்திரை கார்மழைபெய்து அடுத்த வருஷம் வரும்வரை) நடக்காது.  


ஹேவிளம்பி வருஷ மகரசங்கராந்தியின் காலம் – மகர சங்கராந்தி ஸ்திரீ புருஷ ரூபமாய் இரண்டு முகமும் மூன்று கண்ணும் நான்கு வாயும் சிவப்பு  தந்தமும் நீண்ட நாக்கும் தொங்குகிற புருவமும் நீண்ட காதும் எட்டுக்கையும் இரண்டு காலும் செம்பட்டை மயிரும் உள்ள விகாரமான கருப்பு சரீரத்துடன் 12 யோசனை பருமனும் 100 யோசனை உயரமும் உள்ள கோர ரூபத்துடன் வருவாள். மகர சங்கராந்தி நாமதேயம் கோரா. அகில்ஜலஸ்நானம் செய்து கம்பளி வஸ்திரம் தரித்து பஞ்சலோகப் பாத்திரத்தில் தயிர் போஜனம். வசம்பு பூசிக்கொண்டு மாணிக்க சாமரத்துடன்  ரக்தபத்திரகுடையுடன் முத்து ஆபரணம் அணிந்து அசோகாபுஷ்பம் சூடி மத்தளம் வாத்தியத்துடன் எரிவில்லாயுதம் ஏந்தி அலைச்சல் முகத்துடன் மேற்குத்திசை நோக்கி எருது வாகனத்தில் தை மாதம் 1 ஆம் தேதி (14-1-2018) 26 நாழிகை 16 வினாடி ஞாயிற்றுகிழமை மாலை வேளையில் மூல நட்சத்திரத்தில் திரயோதசி திதியில் வணிசை காரணத்தில் மிதுன லக்கினத்தில் தனுர் ராசியில் பிரவேசிக்கிறாள்.


இதன் விசேச  பலன்:  
     கிருஷ்ண பட்சத்தில் வருவதால் சுமார். அலைச்சல் முகத்துடன் வருவதால் பிரஜைகளுக்கு கெடுதி. கோரா என்ற பெயருடன் வருவதால் ராஜ கோபம். ஸ்நான பலன்-சைத்திய பீடை. வஸ்திரபலன் –ஜடை தரித்தவர்களுக்கு பீடை. கந்த பலன்-வாசாலர்க்கு பீடை. புஷ்ப பலன்-மாலைகட்டுபவர்களுக்கு பீடை. வேசியர் பீடை. சன்யாசிகளுக்கு பீடை. எருமை நாசம். சூத்திரர்களுக்கு பீடை. நிருத்தனர்களுக்கு பீடை. சூரர்களுக்கு பீடை. ஜனசௌக்கியம். சர்வ ஜாதிகளுக்கும் சமஸ்தான சம்பத்துக்கள்.   

மகர சங்கராந்தி மாநிலங்களில் வேறு பெயர்கள்: 

தமிழில் : மகரசங்கராந்தி அல்லது உழவர் திருநாள், பொங்கல்
ஆந்திரத்தில் :   மகரசங்கராந்தி
கேரளாவில் : மகரசங்கராந்தி
கர்நாடகாவில் : சுக்கி ஹப்பா, மகர் சங்க்ரமா, மகரசங்கராந்தி
குஜராத்தில் : உத்ராயன்
சட்டீஸ்கர், கோவா, ஓடிஸா, பிகார், ஜார்கண்ட், மத்திய பிரதேஷ், மஹாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தர் பிரதேஷ், உத்தராகண்ட், ஜம்மு ஆகிய மாநிலங்களில் : மகர சங்கராந்தி 
ஹரியானா, ஹிமாச்சலம், பஞ்சாபில்:  மக்ஹி
அஸ்சாமில் :  மக்ஹ பிஹு
காஷ்மீரில் : ஷிசூர் சங்க்ராந்
உத்தர பிரத்சம், மேற்கு பீகாரில் : கிச்டி
மேற்கு வங்காளத்தில் : பௌஷ் சங்கராந்தி
மிதிலாவில்:  தில சங்க்ராத்
நேபாளத்தில் : மக்ஹி சங்க்ராந்/ கிச்டி சங்க்ராந்
பங்களாதேஷில் : பௌஷ் சங்கராந்தி
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில்: திர்மூரி









பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள பிரதேசங்களில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா








References:
1.      On Makar Sankranti, the one thing that ties festivities across India is seasonal eating https://scroll.in/magazine/864777/on-makar-sankranti-the-one-thing-that-unites-festivities-across-india-is-seasonal-eating
3.      As India celebrates Makar Sankranti, here are how 7 countries across the world celebrate harvest festivals - https://www.businessinsider.in/As-India-celebrates-Makar-Sankranti-here-are-how-7-countries-across-the-world-celebrate-harvest-festivals/articleshow/50562038.cms








No comments:

Post a Comment